பழைய வாகனங்களை குறைக்க புதிய சட்டங்கள்; எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு!

பழைய வாகனங்களை குறைக்க புதிய சட்டங்கள்; எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு!

கொரோனா பேரிடருக்குப் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் 2021-22 இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை வாசித்து வருகிறார். மருத்துவத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை குறைக்க புதிய சட்டங்கள்; எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு!

ஆட்டோமொபைல் துறையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்கும் நோக்கிலும், கச்சா எண்ணெயின் தேவையைக் குறைக்கும் வகையிலும் பழைய இஞ்ஜின் பொறுத்தப்பட்ட வாகனங்களைக் குறைக்க புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகிறது.

பழைய வாகனங்களை குறைக்க புதிய சட்டங்கள்; எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு!

அதேபோல மின்சாரத்தில் இயங்கும் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் உலகின் இரண்டாவது பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தி அலகை இந்தியாவில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் மின்சார வாகன உற்பத்தியைப் பெருக்க அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.