யாருடன் கூட்டணி? – திண்டாட்டத்தில் ‘விசிக’

 

யாருடன் கூட்டணி? – திண்டாட்டத்தில் ‘விசிக’

“திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசித்து வரும் நிலையில் “திமுகவுடனும் கூட்டணி வைக்க முடியாது.அதிமுகவுடனும் கூட்டணி வைக்க முடியாது” என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது விசிக.
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. இதற்குக் காரணம் மிகச் சொற்ப தொகுதிகளை திமுக கொடுத்த போது, அதிமுக 10 தொகுதிகளை கொடுத்தது. பின்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தது விசிக. இந்தக் கூட்டணியில் 10 இடங்கள் கிடைத்தது இதில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் விசிக தோல்வி அடைந்தது. ஆனால் இதன் பின்னரும் திமுக கூட்டணியில் விசிக இருந்தது. பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் விசிக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

யாருடன் கூட்டணி? – திண்டாட்டத்தில் ‘விசிக’


இந்த நிலையில் வரும் தேர்தலில் விசிகவுக்கு 2 அல்லது 3 இடங்கள் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக பட்சமாக பேரம் பேசினால் 7 இடங்களைத் தரலாம் என திமுக எண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது தவிர பல திமுக முக்கியஸ்தர்கள் விசிகவுடன் கூட்டணியே வேண்டாம் என்றும் சொல்கிறார்களாம்.ஆனால் 10 தொகுதி இல்லாவிட்டால் கூட்டணியே வேன்டாம் என்ற நிலையில் இருக்கிறது விசிக.
இதற்கிடையே கடந்த முறை திமுக கொடுத்த 10 தொகுதிகளை போல் அதிமுகவில் தற்போது கொடுத்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என திருமாவளவனுக்கு ஆலோசனைகள் கூறி வருகின்றனர். திமுகவுடன் கூட்டணி பிரச்சனை ஏற்படலாம் என்பதை முன்னரே அறிந்த திருமாவளவன் சமீப காலமாக அதிமுகவை தாக்கிப் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாருடன் கூட்டணி? – திண்டாட்டத்தில் ‘விசிக’

அண்ணா பல்கலை., விவகாரத்தில் கூட உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தெரிவித்த தமிழக அரசை திருமா பாராட்டினார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து விசிகவை மனதில் வைத்துதான் என்கிறார்கள்.ஆனால் அதிமுகவிலும் விசிகவுக்கு சிக்கல் இருக்கிறது. ஏற்கெனவே பாமக மற்றும் பாஜக அதிக இடங்களைக் கேட்டு வரும் நிலையில் விசிகவுக்கு10 இடங்கள் கொடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். . தவிரவும் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்ற கண்டிசனும் இருக்கிறது. இதனால் விசிக அதிமுகவுடனும் கூட்டணி வைக்க முடியாத நிலையில் உள்ளது.

யாருடன் கூட்டணி? – திண்டாட்டத்தில் ‘விசிக’