நாம் தமிழர் யாருடன் கூட்டணி?… மௌனம் கலைத்த சீமான்!

 

நாம் தமிழர் யாருடன் கூட்டணி?… மௌனம் கலைத்த சீமான்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும், எவ்வளவு சீட்டுகளில் நிற்கும் போன்ற பல்வேறு கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எந்த அரசியல் கட்சித் தலைவர் பேட்டியளித்தாலும் முதல் கேள்வியாக யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்பது முன்வைக்கப்படுகிறது. இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காத நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அவர் கூறிய பதில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நாம் தமிழர் யாருடன் கூட்டணி?… மௌனம் கலைத்த சீமான்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் சீமான் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடைபெற்றது. விழா முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என்னுடைய மகன் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். இது பரம்பரை வழக்கம். விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கும் உறவினர்களுக்கும் 108 கிடாய் வெட்டி விருந்து வைத்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

நாம் தமிழர் யாருடன் கூட்டணி?… மௌனம் கலைத்த சீமான்!

சசிகலா வருகை, கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “சசிகலா வருகை அதிமுகவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் 8 கோடி தமிழர்களிடம் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம்” என்று கூறினார்.

நாம் தமிழர் யாருடன் கூட்டணி?… மௌனம் கலைத்த சீமான்!

தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசிய சீமான், “நெல் வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட இன்னைக்க பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை விளைவித்தவன் கடனாளியாக இருக்கிறான். ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே இருக்கிறான். ஏனென்றால் அடிப்படையில் பிரச்சினை இருக்கிறது. விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்றவேண்டும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வெற்றிநடை போடவில்லை. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடும்” என்றார்.