“ரஜினியுடன் கூட்டணி” : ஓபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

“ரஜினியுடன் கூட்டணி” : ஓபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

“ரஜினியுடன் கூட்டணி” : ஓபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்று பலரும் எண்ணி இருந்த நிலையில் அவர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. ரஜினியின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு வெளியான சில நேரங்களில் பலரும் இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

“ரஜினியுடன் கூட்டணி” : ஓபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அந்த வகையில் தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே தப்புகுண்டு பகுதியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ் , நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

“ரஜினியுடன் கூட்டணி” : ஓபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

இந்நிலையில் ஓபிஎஸ் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் பேசியது அவருடைய கருத்து. ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் சொன்ன கருத்தை அதிமுக மதிக்கும். எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் ரஜினியை ஒப்பிட முடியாது . இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் என்றைக்கும் மாறாது. திமுகவிற்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று கூறி விட்டு சென்றார்.