’’கூட்டணிதான்!’’ – கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

 

’’கூட்டணிதான்!’’ – கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

க்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசியபோது, அதிமுக, திமுக இருபெரும் கட்சிகளை தாண்டி வெற்றி பெற முடியுமா? அல்லது நீங்கள் அவர்களுடன் கூட்டணிக்கு போய் விடுவீர்களா? என்று கேள்வி எழுந்தது.  அதற்கு, ஓரிரு வரியில் பதில் சொல்லிவிட்டு கடந்து போகாமல், கமல்ஹாசன் விரிவான பதிலை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

’’அரசியல் கட்சிகளை சிந்தனையின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டுமே தவிர, பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்? 2 பேரின் முயற்சியும் சமூகத்தை நோக்கிதானே?. இந்த பழக்கம் திராவிட கட்சிகளால் வந்தது. மக்கள் நீதி மய்யம் என்பதே கூட்டணி தான். வெவ்வேறு துறையில் இருந்தவர்கள், வெவ்வேறு கட்சியில் இருந்தவங்க கூட விலகி வந்து இருக்கிறார்கள்.

சித்தாந்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும் செய்ய முடியாது. என்னை வலியுறுத்தி இப்படியான இந்தியாவாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்வதை தான் எதிர்க்கிறோம். அதனால் மத்தியில் யார் வந்தாலும் நாம் போராடுவது என்னவென்றால் நாளை மக்கள் நீதி மய்யம் என்று வந்து அவர்கள் எல்லாம் என்ன சமஸ்கிருதம் வேணாலும் படிங்க, தமிழ்நாட்டில் இப்படி தான். அப்படியான தைரியமாய் உரிமையை நாம் போராடி பெற வேண்டும். அதை அரசியலில் களம்கண்டு தேர்தல் வழி செய்யலாம். இல்லை தெருவுக்கு வந்து பண்ணலாம்.

தி.மு.க. கூட கூட்டணி என்றால் இல்லை. ஆனால் நாம் கூடி தாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்ததென்றால் செய்வோம், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அந்த இலக்கு வந்த பிறகு நம்முடைய இடத்திற்கு போய்விட வேண்டும். மாற்றத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் சேர்வீர்களா என்று கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி யோசித்து தான் தனிக்கட்சி ஆரம்பித்தோம்.

நம்மளே அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டால் எதிர்க்கட்சியோடு உரையாடல் செய்வதற்கே மறுத்து விட்டால் மறுபடியும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டியது தான். ஒருத்தரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும். இது தான் என் எண்ணம்’’.