Home இந்தியா சிகிச்சையில் இறந்த பெண் -சந்தேகத்தில் கொதித்த மகன்கள் -அடுத்து டாக்டர்களுக்கு நேர்ந்த கதி

சிகிச்சையில் இறந்த பெண் -சந்தேகத்தில் கொதித்த மகன்கள் -அடுத்து டாக்டர்களுக்கு நேர்ந்த கதி

சிகிச்சையில் இறந்த பெண் -சந்தேகத்தில் கொதித்த மகன்கள் -அடுத்து டாக்டர்களுக்கு நேர்ந்த கதி

ஒரு பெண் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பலனின்றி இறந்ததால் ,அவரின் மகன்கள் டாக்டர்களை தாக்கியதால் அங்கு கலவரம் உண்டானது .

Soon after the woman breathed her last, Ali and his brother accused the doctors of medical negligence (Representative Image).


உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாகராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் சுல்பிகர் அலி என்பவர் தன்னுடைய தாய் பத்ருன் நிஷாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்கு சேர்த்தார் .ஆனால் 72 வயதான அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .அதன் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரான அவரின் மகனும் அவரின் சகோதரருக்கும் தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ,அங்கிருந்த டாக்டர்களிடம் தகராறு செய்தனர் .ஆனால் டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்தும் அவரை தங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினர் .ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் மகன் அதை நம்பாமல் தன்னுடைய தாய்க்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சையளிக்கவில்லையென்று குற்றம் சுமத்தினார் .அதன் பிறகு அங்கிருந்த மருத்துவ பணியாளர்களை கடுமையாக தாக்கினர் .
அவர்களிடையே வாக்குவாதம் அதிகரித்தபோது, ​​இரு தரப்பினரும் தங்கள் மொபைல் போன்களில் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினர். ஆனால் ஹாஸ்ப்பிட்டல் வார்டில் வீடியோ எடுக்க மருத்துவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் , ​​அங்கு வன்முறை வெடித்தது.

போலீஸ் விசாரணையில் அலி மற்றும் அவரது உறவினர்களுக்கும் இந்த மோதலின் போது காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஆத்திரமடைந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலவரம் செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமார் 7 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .. பிறகு போலீசார் அவர்களை சமாதானம் செய்ததும் கலைந்து சென்றனர்

சிகிச்சையில் இறந்த பெண் -சந்தேகத்தில் கொதித்த மகன்கள் -அடுத்து டாக்டர்களுக்கு நேர்ந்த கதி
சிகிச்சையில் இறந்த பெண் -சந்தேகத்தில் கொதித்த மகன்கள் -அடுத்து டாக்டர்களுக்கு நேர்ந்த கதி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு!

கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்...

39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...

“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்!

ஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League)...

புதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...
- Advertisment -
TopTamilNews