• December
    16
    Monday

Main Area

Main



'எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க வுக்கு தான் வாக்கு செல்லும்': ஒரே நாளில் வைரல் ஆன பா.ஜ.க வேட்பாளர் தோல்வி...!

பாக்சிஷ் சிங்
பாக்சிஷ் சிங்

ஹரியானா மாநிலத்தின் சட்டசபை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், பா.ஜ.க கூட்டணி கட்சிகள் 40  இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்ற இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹரியானா மாநிலம், அஸந்த் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பாக்சிஷ் சிங், எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.கவுக்கு தான் வாக்குகள் விழும், அப்படி தான் நாங்கள் வாக்கு இயந்திரத்தை செட் செய்துள்ளோம்' என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. 

பாக்சிஷ் சிங்

பாக்சிஷ் சிங் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. நேற்று வெளியான தேர்தலின் முடிவில் பாக்சிஷ் சிங் 23,000 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்து அந்த தொகுதியில் தோல்வியை தழுவினார். தேர்தலில் வெற்றி பெற வாக்கு இயந்திரத்தையே மாற்றுவோம் என கூறிய பா.ஜ.க வேட்பாளர் தோல்வி அடைந்தது வைரல் ஆகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.