“அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு” தனியார் தொலைக்காட்சி மீது பாய்ந்த ஈஷா மையம்!!

 

“அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு” தனியார் தொலைக்காட்சி மீது பாய்ந்த ஈஷா மையம்!!

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு வாக்காளர் அட்டை அளித்துள்ளதாக எழுந்த என்ற குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு” தனியார் தொலைக்காட்சி மீது பாய்ந்த ஈஷா மையம்!!

கோவை தொண்டாமுத்தூர் வெள்ளிங்கிரி மலை அருகில் பாகம் 51 இல் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் . அங்கு ஓட்டுபோடும் நபர்கள் பழங்குடியினர், பாரதியார் வீதி மக்கள். இந்த இரு பகுதிகளிலும் 200 பேர் மட்டுமே உள்ளார்கள். மிச்சம் உள்ள 700 பேர் ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கென்று தனி வீட்டு முகவரி இல்லை. இவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் எந்த வீட்டு முகவரியும் குறிப்பிடப்படவில்லை.

அனைவரும் யோகா மையத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவின் பெயர் பலரது வாக்காளர் அடையாள அட்டைகளில் குரு என்றும் ஜெகதீசன் வாசுதேவ் என்றும் ஜக்கிவாசுதேவ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சுமார் 400 பேர் போலியாக தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாக பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு ஈஷா யோகா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈஷா யோகா மையம்தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஈஷா யோக மையத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளனர். அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு இது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளது.