கொரோனாவால் கடந்த மே மாதத்தில் வாகன பதிவு குறைந்தது….. மொத்தமே 2.02 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு…

கொரோனாவால் கடந்த மே மாதத்தில் வாகன பதிவு குறைந்தது….. மொத்தமே 2.02 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு…

மோட்டார் வாகன சட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்யாமல் சாலையில் இயக்க கூடாது.  பொதுவாக நாடு முழுவதுமாக மாதந்தோறும் பத்து லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்படுவது வாடிக்கை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட பதிவு செய்யப்படவில்லை.

கொரோனாவால் கடந்த மே மாதத்தில் வாகன பதிவு குறைந்தது….. மொத்தமே 2.02 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு…

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் வாகன பதிவு 88.87 சதவீதம் குறைந்தது என வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆஷிஷ் ஹர்ஷாராஜ் காலே கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன பதிவு பூஜ்யம். அதேவேளையில் கடந்த மே தொடக்கத்தில் லாக்டவுன் விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு பல நகரங்களில் வாகன டீலர்ஷிப்ஸ், ஒர்கஷாப்புகள் திறக்கப்பட்டன என தெரிவித்தார்.

கொரோனாவால் கடந்த மே மாதத்தில் வாகன பதிவு குறைந்தது….. மொத்தமே 2.02 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு…

வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் 2.02 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 மே மாதத்தில் மொத்தம் 18.21 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆக கடந்த மாதத்தில் வாகன பதிவு 88.87 சதவீதம் குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் (2,711), 3 சக்கர வாகனங்கள் (1,881), இரு சக்கர வாகனங்கள் (1.59 லட்சம்), பயணிகள் வாகனங்கள் (30,749) மற்றும் டிராக்டர் (8,317) என அனைத்து வகையான வாகனங்கள் பதிவும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.