தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

 

தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

உடல் பருமன் என்பதுதான் இன்றைய உலகின் ஆரோக்கியம் தொடர்பான முக்கியச் சிக்கலாக மாறிவிட்டது. அது சட்டென்று ஒரே ஆண்டில் நடந்த ஒன்றல்ல… பல வருடங்களாக நமது சீரற்ற உணவுபழக்க முறையினால் வந்த ஒன்று.

உடல் பருமனில் தனியே ஒரு சிக்கல் எனும் பார்த்தால் அது தொப்பை. பலர் வாக்கிங், ஜாங்கிங், டயட் என இருப்பது எல்லாமே தொப்பையைக் குறைக்கத்தான். அது ஆரோக்கியம் தொடர்பான விஷயமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை. மாறாக, தோற்றத்தில் அழகு கூட்டவும் செய்யும் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தொப்பையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கான ஈஸி டிப்ஸ்.

தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

உடற்பயிற்சி மிகவும் முக்கியம். வெறும் வாக்கிங் மட்டுமே தொப்பையைக் குறைத்துவிடும் என்று நினைத்து விட வேண்டாம். குறிப்பாக தொடை, கைகள், தசைகளை பலம் பெற வைக்கும் உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் ரொம்பவே முக்கியம். தொப்பைக்கும் தூக்கத்திற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. எனவே தினசரி குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்து தூங்கும் விதமாக உங்களின் தினசரி வேலை திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுவதாக இருந்தால் நல்லது.

உணவில் கொள்ளு சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டாதீர்கள். கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு சுண்டல் என எப்படியாவது வாரம் குறைந்தது இரண்டு முறையாவது கொள்ளுவை உணவில் இருக்கட்டும்.

தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

எல்லாவற்றிற்கும் அடிப்படை தண்ணீர். குளிர்காலம் என்பதால் பலருக்கும் தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவோம். அப்படி இல்லாமல் தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிப்பதைப் பழகிக்கொள்ளுங்கள்.

புகை, மது பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். கூடவே ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கும் தடா போடுங்கள். இரவு தூங்குவதற்கு குறைந்த பட்சம் 1.30 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு விடுங்கள்.

தொப்பையைக் குறைக்க இதெல்லாம் செய்யலாம் – ஹெல்த் டிப்ஸ்

காபி, டீ க்கு பதில் லெமன் டீ, க்ரீன் டீ என்று மாறிக்கொள்ளலாம். உணவில் போதுமான அளவு பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல வெள்ளை நிற ஜீனியைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். எவ்வளவு ருசியான உணவு என்றாலும் போதும் என்ற அளவில் மட்டும் சாப்பிடுங்கள்.