“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வரலாற்று வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்திய அணி. மேலும் பார்டர்-கவாஸ்கர் தொடர் முழுவதிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. அதுகுறித்த முழு விவரம் பின்வருமாறு:

  1. 31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்!

கடந்த 31 வருடங்களாக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை. இந்த வரலாற்றை இந்தியா மாற்றி எழுதியிருக்கிறது.

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!
  1. 70 ஆண்டுகளுக்குப் பின் பிரிஸ்பேனில் பெஸ்ட் சேஷிங்!

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேன் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை சேஸ் செய்து ஆஸ்திரேலியாவை வேறொரு அணி (இந்தியா) வீழ்த்தியிருக்கிறது. இதற்கு முன் 1951ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 236 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்திருந்தது.

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!
  1. தல தோனியை ஓவர்டேக் செய்த தவுசன் வாலா பட்டாசு!

டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி 32 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். ஆனால், பண்ட் அதிவேகமாக 27 இன்னிங்ஸிலேயே ஆயிரம் ரன்களைக் கடந்துவிட்டார்.

  1. சச்சின், டிராவிட்டுடன் 11ஆவது இந்தியராக இணைந்த புஜாரா!

டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த 11ஆவது இந்தியர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார்.

  1. 72 ஆண்டுகளுக்குப் பின் முறியடிக்கப்பட்ட சாதனை!

சிட்னி டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (148 ரன்கள்) எடுத்த ஜோடி என்ற சாதனையை புஜாரா-பண்ட் ஜோடி புரிந்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் ஹசாரே-ருசி மோடி ஜோடி அதிக ரன்கள் எடுத்திருந்தது.

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!
  1. சிட்னியின் நீண்…ட நான்காவது இன்னிங்ஸ்!

சிட்னியில் ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் விஹாரி-அஸ்வின் ஜோடி 256 பந்துகளை எதிர்கொண்டது. இது சிட்னியில் அதிக நேரம் விளையாடப்பட்ட நான்காவது இன்னிங்ஸ்.

  1. கவாஸ்கரை முந்திய புஜாரா!

ஒரு இன்னிங்ஸில் 200க்கும் அதிகமான பந்துகளை ஒன்பதாவது முறையாக புஜாரா எதிர்கொண்டிருக்கிறார். இதற்கு முன் அதிகபட்சமாக கவாஸ்கர் 8 முறையும் சச்சின் 7 முறையும் எதிர்கொண்டிருந்தார்கள்.

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!
  1. டாப் 10இல் இடம்பிடித்த ஜடேஜா-சிராஜ் ஜோடி!

சிட்னி டெஸ்டில் பத்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 28 ரன்கள் எடுத்தன் மூலம் பார்டர்-கவாஸ்கர் தொடரின் டாப் 10 பார்ட்னர்ஷிப்பில் இந்த ஜோடி இணைந்தது.

  1. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்!

மன்னிக்கவும், இது மோசமான சாதனை தான். முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு மோசமான சாதனையை எந்த அணியும் செய்ததில்லை.

“31 வருசம் கழிச்சி ராக்கி கருடன அவன் இடத்துல வச்சே கொன்னுட்டான்” – இந்தியா படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ!

அதனால் என்ன… காயம்பட்ட அணியை வைத்து அசுரபலம் கொண்ட ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே வீழ்த்தியது போதாதா, காலம் முழுவதும் இந்தியாவை கொண்டாடி தீர்ப்பதற்கு. இப்படி தோற்கின் எப்படை வெல்லும்!