நடப்பாண்டு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு கிடையாது! அனைவரும் பாஸ்- மேற்குவங்க அரசு அதிரடி

 

நடப்பாண்டு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு கிடையாது! அனைவரும் பாஸ்- மேற்குவங்க அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டும் நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நடப்பாண்டு பள்ளிகளே திறக்காத நிலையில் தேர்வுகள் நடைபெறுமா என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவிவந்தது. அதேபோல் எவ்வாறு பள்ளிகளை திறப்பது, பள்ளி, கல்லூரிகளை திறந்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ என அரசாங்கமும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் ஒவ்வொரு அரசும் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறது. தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

நடப்பாண்டு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு கிடையாது! அனைவரும் பாஸ்- மேற்குவங்க அரசு அதிரடி

இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என அம்மாநில முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி அறிவித்துள்ளார், கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு பாடங்கள் தொடங்காததாலும், பள்ளிகள் திறக்கப்படாததாலும் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.