பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை- தஞ்சையில் கண்டன ஆர்பாட்டம்!

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை- தஞ்சையில் கண்டன ஆர்பாட்டம்!

தஞ்சாவூர்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 32 நபர்களை விடுதலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதியை இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை- தஞ்சையில் கண்டன ஆர்பாட்டம்!

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றம் சாட்ட அனைவரும் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை- தஞ்சையில் கண்டன ஆர்பாட்டம்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், லக்னோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாரபட்சமானது என முழக்கங்களை எழுப்பினர்.

உழவர் தாளாண்மை இயக்க திருநாவுக்கரசு, ஏஐடியுசி தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.