காவல்நிலையங்கள் மூடல்; அனைத்து காவல்நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிப்பு

 

காவல்நிலையங்கள் மூடல்; அனைத்து காவல்நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிப்பு

வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 2 செவிலியர்கள், 2 மருத்துவமனை உழியர்கள் உட்பட மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 22240 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 2550 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

காவல்நிலையங்கள் மூடல்; அனைத்து காவல்நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிப்பு

இந்நிலையில் வேலூர் வடக்கு மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீஸார் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவலர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்களுக்கு மூடிவைக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்துக்கு புகார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களளின் வசதிக்காக காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். அந்த பெட்டியில் புகாரை மக்கள் போட்டுவிட்டு போகலாம் என்றும் இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்தின் வளாகத்தில் ஒரு காவலர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.