அனைத்து வழிபாட்டு தலங்களும் செப் 6ஆம் தேதி திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு !

அனைத்து வழிபாட்டு தலங்களும் செப் 6ஆம் தேதி திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் நேற்றைய நிலவரப்படி உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதும், தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டும் வருகிறது.

அனைத்து வழிபாட்டு தலங்களும் செப் 6ஆம் தேதி திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு !

இருப்பினும் அவற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அதிக அளவில் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலத்தில் தொற்றின் வீரியத்தை கொண்டு தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து வழிபாட்டு தலங்களும் செப் 6ஆம் தேதி திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு !

இந்நிலையில் ராஜஸ்தானில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது. சமூக இடைவெளி , முக கவசம் அணிந்து பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் திறக்கவுள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது வருகின்றன.