“வன்னியர்களுக்கு எதிராக மறவர்கள்” : அதிர்ச்சியில் பாமக தலைமை!

 

“வன்னியர்களுக்கு எதிராக  மறவர்கள்” : அதிர்ச்சியில் பாமக தலைமை!

வன்னியருக்கு 10.5 % இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“வன்னியர்களுக்கு எதிராக  மறவர்கள்” : அதிர்ச்சியில் பாமக தலைமை!

வன்னியருக்கு 10.5 % இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தெரிவித்த அக்கூட்டத்தின் அமைப்பு ஆலோசகர் விஜயகுமார், ” வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாகவிஷயத்தில் சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றார்.இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் பாஜக பிரித்து வருகிறது. தமிழகத்தில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மக்களை கூறுபோட்டுள்ளனர். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி . வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து அதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையை சீர்குலைக்க அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் முடிவெடுத்துள்ளன.அவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

“வன்னியர்களுக்கு எதிராக  மறவர்கள்” : அதிர்ச்சியில் பாமக தலைமை!

முன்னதாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளித்ததற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் சமயத்தில் கூட்டணிக்காக அதிமுக , பாமகவின் ஆசையை நிறைவேற்றியுள்ளதாக விமர்சித்து வந்தன.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னதான் அதிமுக வன்னியர் இடஒதுக்கீடு 10.5% அறிவித்தாலும் அதை நாம் தான் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார். இப்படி வன்னியர் இடஒதுக்கீடு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த சூழலில் பாமக – பாஜக – அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்பது பெரும் சவால் நிறைந்ததாக உள்ளது.