சுற்றுலாதான் போகக் கூடாது வரலாற்று சின்னங்களை பார்க்க செல்லலாம்- மத்திய அரசு!

 

சுற்றுலாதான் போகக் கூடாது வரலாற்று சின்னங்களை பார்க்க செல்லலாம்- மத்திய அரசு!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆதாவது மார்ச் 17 ஆம் தேதி 3,400 க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் மூடப்பட்டன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்கள் தடை செய்யப்பட்டன. தற்போது வரலாற்று சின்னங்களை திறக்க அனுமதி அளித்து பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் முழு பாதுகாப்புடன் திறக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். அன்லாக் 1 என்ற திட்டத்தின்கீழ் 820 நினைவுச்சின்னங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. மீதமுள்ள நினைவுச்சின்னங்கள் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாஜ்மஹால் செங்கோட்டை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களை பார்வையிட வரும் 6 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுகிறது.