லாக்டவுன் போடுங்க ஜி.. முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் அமைச்சர்கள் கோரிக்கை.. இன்று முடிவு

 

லாக்டவுன் போடுங்க ஜி.. முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் அமைச்சர்கள் கோரிக்கை.. இன்று முடிவு

மகாராஷ்டிராவில் லாக்டவுன் போடுங்க என அம்மாநில அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார் என தகவல்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வார இறுதி லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே எடுத்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

லாக்டவுன் போடுங்க ஜி.. முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் அமைச்சர்கள் கோரிக்கை.. இன்று முடிவு
முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயித்துக்கும் அதிகமாக உள்ளது. நேற்று அம்மாநில அரசு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,924 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது என்றும், 351 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தது. கொரோனா பாதிப்பு அதிகரி்த்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மாநிலத்தின் நிலைமை மோசமாகி வருவதால் லாக்டவுன் விதிக்கும்படி அம்மாநில அமைச்சர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாக்டவுன் போடுங்க ஜி.. முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் அமைச்சர்கள் கோரிக்கை.. இன்று முடிவு
ராஜேஷ் தோபே

இது தொடர்பாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், நாளை முதல் மாநிலத்தில் லாக்டவுன் விதிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது முதல்வரிடம் அனைத்து அமைச்சர்களின் வேண்டுகோள். இப்போது அது அவருடைய முடிவு. இது குறித்து முடிவு நாளை (இன்று) இரவு 8 மணிககு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆக, மகாராஷ்டிராவில் லாக்டவுன் விதிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது போல் தெரிகிறது.