இனி எல்லா பொருட்களையும் வாட்ஸ் அப்பில் வாங்கலாம்!

 

இனி எல்லா பொருட்களையும் வாட்ஸ் அப்பில் வாங்கலாம்!

வாட்ஸ்அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன் கிடையாது. பயன்படுத்த எளிமையான இருப்பதும், செய்திகள் அனுப்ப, வீடியோ கால் என மக்களுக்கு நம்பகமான செயலியாக இருப்பதால் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. எமோஜிகள், வால்பேப்பர்கள் என அறிமுகம் செய்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதிகளை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் பொருட்களை வாங்குவதற்கான வசதிகளை உருவாக்கவும் முயற்சிகள் செய்து வருகிறது. இதற்கான முக்கிய ஆன்லைன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி எல்லா பொருட்களையும் வாட்ஸ் அப்பில் வாங்கலாம்!

சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியில் இதற்கென பிரத்யேக பட்டன் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடியோ கால் பட்டன் இருக்கும் இடத்தில் இந்த ஷாப்பிப் பட்டனை விருப்பம்போல வைத்துக்கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனங்களில் இதன் மூலம் ஷாப்பிங் செய்யலாம் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே, வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் ஷாப்பிங் எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இனி எல்லா பொருட்களையும் வாட்ஸ் அப்பில் வாங்கலாம்!

வாட்ஸ்அப் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ப கார்ட் என்கிற பட்டனும் கொண்டுவரப்பட்டுள்ளது. கார்ட் பட்டனை தேர்வு செய்து வைத்துக் கொண்டால், அதன் வழியாக ஆன்லைன் விற்பனையகங்களுக்கு செல்லலாம். அதன்மூலம் பொருட்களை தேர்வு செய்து வாட்ஸ் அப் வழியாகவே பணத்தையும் செலுத்தலாம். இந்த புதிய வசதி மூலம் வாட்ஸ் அப் மட்டும் இருந்தால் போதும், எந்த இடத்திலும், இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதி ஏற்படும் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. வாட்ஸ் அப் சாட்டிங் செய்து கொண்டே, பிடித்தவர்களுக்கு பிடித்தமான பொருட்களை ஆர்டர் செய்துவிடலாம் என்றால், நம்ம மக்களுக்கு கொண்டாட்டம்தான்!