ரஜினியை எச்சரித்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் : கட்சி பெயரை வெளியிடுவதில் சிக்கல்!

ரஜினியை எச்சரித்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் : கட்சி பெயரை வெளியிடுவதில் சிக்கல்!

நடிகர் ரஜினிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியை எச்சரித்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் : கட்சி பெயரை வெளியிடுவதில் சிக்கல்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ள அவரின் கட்சியின் பெயரை மக்கள் சேவை கட்சி என் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் டிசம்பர் 31-ஆம் தேதி தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியை எச்சரித்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் : கட்சி பெயரை வெளியிடுவதில் சிக்கல்!

இந்நிலையில் ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்க இருக்கும் கட்சிக்கு, மக்கள் சேவை கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது.

ரஜினியை எச்சரித்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் : கட்சி பெயரை வெளியிடுவதில் சிக்கல்!

அப்போது நிகழ்ச்சியில் பேசிய தலைவர் தங்க.சண்முகசுந்தரம், கடந்த 25 ஆண்டுகளாக, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் நாம் சேவை செய்து வருகிறோம். ரஜினி புதிதாக மக்கள் சேவை கட்சி என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி செய்தால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் ரஜினி தனது கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். மீறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூட்டத்தில் பேசினார்.