வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை… விவசாய சங்க தலைவர் தகவல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை… விவசாய சங்க தலைவர் தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு பிறகு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த் நடத்தினர். இந்த சூழ்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளை திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை… விவசாய சங்க தலைவர் தகவல்
அமித் ஷா

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை 7 மணி அளவில் விவசாயிகள் அமைப்புகளின் 13 தலைவர்கள் சந்தித்து பேசினர். அந்த சந்திப்புக்கு பிறகு அகில இந்திய கிஷான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசாங்கம் தயாராக இல்லை.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை… விவசாய சங்க தலைவர் தகவல்
ஹன்னன் மொல்லா

ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மத்திய அரசை சந்திக்கமாட்டார்கள் என்று அமித் ஷா தெரிவித்தார். நாளை (இன்று) விவசாயிகளுக்கு புதிய திட்டம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். டெல்லி-ஹரியானா சிங் எல்லையில் புதன்கிழமை (இன்று) மதியம் 12 மணிக்கு அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக விவசாயிகள் சந்திப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.