அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

 

அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் காரணமாக அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!பார் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்தும் வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வு ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனாப் பரவல் குறையாத நிலையில் இந்த தேர்வுவை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து அனைத்திந்திய வழக்கறிஞர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

மேலும், இந்த தேர்வில் பங்கேற்க ஆகஸ்ட் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் அது அறிவித்துள்ளது. மேலும், கொரோனா காலத்தில் வருவாய் இழப்பால் அவதியுறும் வழக்கறிஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பார் கவுன்சில் கோரிக்கைவிடுத்துள்ளது