ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

 

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
கடந்த 29ஆம் தேதியில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட
மூன்றாம் நாள் ஆளுநருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்கான சென்றார். பரிசோதனையில்
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து மருத்துவமனையில் சில மணி நேரங்கள் இருந்த அவர், பின்பு ராஜ்பவன் திரும்பினார். இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘’ஆளுநருக்கு அறிகுறியற்ற கொரோனா உறுதியானது. அவரது உடல்நிலை சீராக உள்ளதால் ராஜ்பவனில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளார்’’என்று தெரிவித்தது.

இதையடுத்து, வரும் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அன்று மாலையில் நடைபெறும் தேனீர் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ராஜ்பவன் அறிவித்துள்ளது.