‘அவங்க’ எல்லோரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – முதல்வர் அதிரடி உத்தரவு!

‘அவங்க’ எல்லோரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைத் தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டம் முடிந்தபின் முதலமைச்சர் சில உத்தரவுகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அவை பின்வருமாறு:

‘அவங்க’ எல்லோரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – முதல்வர் அதிரடி உத்தரவு!

1.தொழிற்சாலைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்

2.களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

3.45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

4.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

‘அவங்க’ எல்லோரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – முதல்வர் அதிரடி உத்தரவு!

5.அவ்வாறு வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

6.திரையரங்கு, சந்தைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.