கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடங்கியது!- மக்கள் அதிர்ச்சி!

 

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடங்கியது!- மக்கள் அதிர்ச்சி!

தேடுபொறியில் ஆதிக்கம் செலுத்தம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் திடீரென முடங்கி உள்ளன. அந்த நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக யு டியூப், ஜிமெயில், ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து செயல்களும் முடங்கி உள்ளன.

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடங்கியது!- மக்கள் அதிர்ச்சி!

இன்று மாலை 5.30 ம மணி அளவில், கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் செயல்படவில்லை. உலக அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின்,செயல்களும் மக்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போதைய கோளாறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நுட்பத்தில், உலக அளவில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் கூகுள் நிறுவனத்தின் , இந்த கோளாறு காரணமாக உலக இயக்கமே தற்போது ஒரு நிமிடம் நின்றுள்ளது என்றுதான் தோன்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் சர்வர்கள் அதிஉயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள நிலையில், இந்த கோளாறுக்குக் காரணம் ஹேக்கர்களா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடங்கியது!- மக்கள் அதிர்ச்சி!

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருகிறோம் என கூறி இருந்தது. அதன்பின்னர், சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயல்களும் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்திருந்த மக்கள் சற்றே ஆசுவாசம் அடைய தொடங்கியுள்ளனர்.

தொழில்நுட்பத்தை முழு முற்றாக நம்பியிருக்கும் மக்களுக்கு, கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முடங்கியது பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் மக்கள் வசித்தது போல, தொழில்நுட்ப காலத்திலும் வாழப் பழக வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பதே பலரது கருத்தாக இருந்தது.