முதலில் பெற்றோர் -அடுத்து தாத்தா ,பாட்டி -காவு வாங்கிய கொரானாவால் அனாதையான சிறுவன்

முதலில் பெற்றோர் -அடுத்து தாத்தா ,பாட்டி -காவு வாங்கிய கொரானாவால் அனாதையான சிறுவன்

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலியான பரிதாபம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

முதலில் பெற்றோர் -அடுத்து தாத்தா ,பாட்டி -காவு வாங்கிய கொரானாவால் அனாதையான சிறுவன்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தேவிநாலா கிராமத்தை சேர்ந்தவர் 46 வயதான  வெங்கடேஷ் .  இவரது மனைவி 44 வயதான ராஜேஸ்வரி , பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், வெங்கடேசுக்கும், அவரது மனைவிக்கும் திடீரென்று  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர்களின் குடும்பத்திலிருந்த  ராஜேஸ்வரியின் தந்தை 72 வயதான ராமனகவுடாவுக்கும் அவரின் மனைவி68 வயது  லட்சுமிபாய்க்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த வயதான தம்பதிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.அவர்கள் தங்களின் மருமகனோடு தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது

அதைத்தொடர்ந்து,அந்த  4 பேரும் அங்குள்ள ஒரு தனியார் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வந்தனர் .ஆனால் அவர்களுக்கு சிகிச்சை  பலனளிக்காமல் கடந்த வாரம் ஒருவர் பின் ஒருவர் இறந்தனர்

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானதால், வெங்கடேஷ், ராஜேஸ்வரி தம்பதியின் 15 வயது மகன் பெற்றோர், தாத்தா, பாட்டி என யாருமே இல்லாமல் அனாதையாகி விட்டான் . இப்படி அந்த சிறுவனின் குடுமபத்தினரை கொரானா காவு வாங்கிய சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை உண்டாக்கியது

முதலில் பெற்றோர் -அடுத்து தாத்தா ,பாட்டி -காவு வாங்கிய கொரானாவால் அனாதையான சிறுவன்