இத்தனை நாளு முழுசா பாக்கல; சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் -கஸ்தூரி

 

இத்தனை நாளு முழுசா பாக்கல; சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் -கஸ்தூரி

தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர் பாஜக நிர்வாகி கே.டி.ராகவன். இவரது ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனும் பாஜக உறுப்பினர்தான். இந்த வீடியோ விவகாரத்திற்கு பின்னர் ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மதன் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை நாளு முழுசா பாக்கல; சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் -கஸ்தூரி

பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய படியே அந்தப் பெண்ணின் ஆடைகளை அகற்றச் சொல்லி மார்புக்காம்புகளை காட்டச் சொல்லி சுய இன்பம் செய்த பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே. டி. ராகவன் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்க கட்சித் தலைமை விசாரணை குழு அமைத்து இருக்கிறது.

கே. டி. ராகவன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பேசியதை முழுவதுமாக ஒருநாளும் கூட பார்க்கவில்லை. ஆனால் சேர்த்துவச்சு எக்கச்சக்கமாக பார்த்துவிட்டதாக இந்த வீடியோ குறித்து நடிகை கஸ்தூரி குறிப்பிட்டிருக்கிறார்.

’’இத்தனை நாளு ஒரு டிவி விவாதம் கூட முழுசா பாக்கல.. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் ! தம்பதி சமேதரா ஒரு பேட்டி இப்போ வைரல்… அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கண்ராவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்…’’ என்று சொல்லிவிட்டு கண்ணீர் வடிக்கும் முகத்தினை பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரியின் அந்த பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.