விற்பனை எகிறியதால் ரூ.225 கோடி லாபம் பார்த்த அலெம்பிக் பார்மா

விற்பனை எகிறியதால் ரூ.225 கோடி லாபம் பார்த்த அலெம்பிக் பார்மா

மருந்து நிறுவனமான அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.224.63 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 81.15 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.

விற்பனை எகிறியதால் ரூ.225 கோடி லாபம் பார்த்த அலெம்பிக் பார்மா

2019 மார்ச் காலாண்டில் அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.124 கோடி ஈட்டியிருந்தது. 2020 மார்ச் காலாண்டில் அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.1,206.83 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.926.95 கோடியாக இருந்தது.

விற்பனை எகிறியதால் ரூ.225 கோடி லாபம் பார்த்த அலெம்பிக் பார்மா

2019-20 நிதியாண்டில் (2019 ஏப்ரல்- 2020 மார்ச்) அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.828.82 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.4,605.75 கோடியாக உயர்ந்துள்ளது.