மேற்கு வங்கத்தில் புதிய திருப்பம்… பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலபன் பண்டாபாத்யாய்.. புதிய பதவி கொடுத்த மம்தா

மேற்கு வங்கத்தில் புதிய திருப்பம்… பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலபன் பண்டாபாத்யாய்.. புதிய பதவி கொடுத்த மம்தா

மேற்கு வங்கத்தில் புதிய திருப்பமாக டெல்லி சென்று ரிப்போர்ட் செய்வதற்கு பதிலாக நேற்று அலபன் பண்டாபாத்யாய் தலைமை செயலாளராக ஓய்வு பெற்றார்.

மேற்கு வங்க தலைமைச் செயலாளரான அலபன் பண்டாபாத்யாயாவை மத்திய அரசு பணிக்கு மாற்ற மத்திய அரசுஉத்தரவிட்டது. அவரை மே 31ஆம் தேதிக்குள் மாநில அரசு அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், தலைமைச் செயலர் அலபன் பண்டாபாத்யாயாவை திரும்பப் பெறும் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. சட்டத்திற்குப் புறம்பானது. ஆகவே மத்திய அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும்.

மேற்கு வங்கத்தில் புதிய திருப்பம்… பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலபன் பண்டாபாத்யாய்.. புதிய பதவி கொடுத்த மம்தா
மத்திய அரசு

கொரோனாவாலும் யாஸ் புயலாலும் மேற்கு வங்கம் பெரிய பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் தலைமைச் செயலரை திருப்பி அனுப்ப முடியாது. ஆகவே உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். மாநில மக்களின் நலுனுக்காக உத்தரவை ரத்து செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் கூட்டத்தில் பங்கேற்காததற்குத் தான் இவ்வாறு செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் வருந்தக்கது தெரிவித்து இருந்தார்.

மேற்கு வங்கத்தில் புதிய திருப்பம்… பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலபன் பண்டாபாத்யாய்.. புதிய பதவி கொடுத்த மம்தா
அலபன் பண்டாபாத்யாய்

இந்நிலையில் புதிய திருப்பமாக, டெல்லி சென்று ரிப்போர்ட் செய்வதற்கு பதிலாக நேற்று அலபன் பண்டாபாத்யாய் தலைமை செயலாளராக ஓய்வு பெற்றார். மேலும் மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் உத்தரவுகளை மீறியதற்காக நடவடிக்கைகளை அலபன் பண்டாபாத்யாய் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று புதிய மேற்கு வங்க தலைமை செயலாளராக எச்.கே.திவேதி பதவியேற்றுள்ளார்.