அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை ஆட்சியர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், முதல்வர் ,துணை முதல்வர் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்!

அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட 3 காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்தன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்!

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 655 காளைகள் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் பச்சை நிற உடை அணிந்த 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர், காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்!

முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி கவுரவித்தார். சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான திருநாவுக்கரசு, விஜய் மற்றும் காளையின் உரிமையாளருக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கினார்.