அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- 50 பேர் மீது வழக்குப்பதிவு!

 

அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- 50 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை

அலங்காநல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி, தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா, கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் இறுதிநாளான நேற்று, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள், கோயில் அருகேயுள்ள வயல் வெளியில் அவிழ்த்து விடப்பட்டன.

அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- 50 பேர் மீது வழக்குப்பதிவு!

சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். இந்த போட்டியை அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். அனுமதியின்றி போட்டி நடந்தை அறிந்த அலங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போட்டியில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும், போட்டியை ஏற்பாடு செய்த ராஜேஷ் என்பவரை கைதுசெய்த போலீசார், 3 மினிவேன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதியின்றி போட்டியை நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.