“அழகிரி விரைவில் கட்சி தொடங்குவார்; திமுக உடையும்”

 

“அழகிரி விரைவில் கட்சி தொடங்குவார்; திமுக  உடையும்”

அழகிரி விரைவில் கட்சி தொடங்கினால் நிச்சயம் திமுக உடையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“அழகிரி விரைவில் கட்சி தொடங்குவார்; திமுக  உடையும்”

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தயாநிதிமாறன் தேர்தல் சமயத்தில் தான் மக்களை சந்திப்பார். அதன்பிறகு அவரை நம்மால் பார்க்க முடியாது .திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சுமார் 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் போடப்படும் பட்ஜெட்டில் எட்டில் ஒரு பாகம் அவரது சொத்துக்கள் மட்டும்தான்.

“அழகிரி விரைவில் கட்சி தொடங்குவார்; திமுக  உடையும்”

சொத்துக்கு மேல் சொத்துக்கள் சேர்ப்பதற்காக பதவியைத் தேடி அலைந்து வருகிறார். அதிமுகவில் மட்டும் தான் ஒரு தொண்டன் கூட முதல்வராக முடியும். திமுகவில் அப்படி கிடையாது; கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தான் முதல்வராக நினைக்கிறார். ஆனால் அவரால் வர முடியாது; அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் .

“அழகிரி விரைவில் கட்சி தொடங்குவார்; திமுக  உடையும்”

வாழையடி வாழையாக அவர்கள் குடும்ப அரசியல் நடத்தி வருகிறார்கள். அப்பாவின் செல்வாக்கின் மூலம் சட்டமன்ற உறுப்பினரானார் ஸ்டாலின். ஆனால் நான் என் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரானேன். சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். அதிமுகவில் யார் கட்சிக்காக உழைக்கிறார்கள் அவர்களே பதவிக்கு வர முடியும். அதற்கு நானே உதாரணம். ஜனவரி 27 க்குப் பிறகு என் ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் அதன்பிறகும் என் ஆட்சி இருக்கும். ஆனால் மு.க. அழகிரி கட்சி துவங்கினால் கண்டிப்பாக திமுக உடையும். அப்போது ஸ்டாலினும், திமுகவும் காணாமல் போவார்கள் ” என்றார்.