• March
    31
    Tuesday

Main Area

Main



திமுகவுக்கு இனிமா கொடுக்கத் தயாராகும் மு.க.அழகிரி..!

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

ஆதரவாளர்கள் வட்டம் சுருங்கி போய், தேமே என இருந்த மு.க.அழகிரி, சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அங்கே, 'நானும் கருணாநிதியின் மகன் தான்... நல்லவர்கள் ஆட்சிக்கு வரணும்' என அதிரடியாக பேசினார். 

அவர் பேச்சைக் கேட்டு, சுணங்கி போயிருந்த ஆதரவாளர்கள் பலர் உற்சாகம் ஆகியிருக்கிறார்கள். ‘’அண்ணன், நல்லவர்னு சொன்னது, ரஜினியை தான்... ரெண்டு பேருமே பல வருஷங்களா, நெருங்கிய நண்பர்களா இருக்கறா... சட்டசபை தேர்தல் நேரத்துல, ரஜினி ஆரம்பிக்கற கட்சிக்கு, அண்ணன் வாய்ஸ் குடுத்து, தி.மு.க.,வுக்கு, 'இனிமா' குடுக்க போறார்’’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.,வுக்கு எதிரி அ.தி.மு.க.,வோ, ரஜினியோ இல்லை. உள்ளுக்குள்ளயே தான் எதிரிகள் இருக்கிறார்கள். 

Rajinikanth

கடந்த 30ம் தேதி மு.க.அழகிரிக்கு பிறந்த நாள். ரஜினி, அழகிரியை போனில் அழைத்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். அப்போது அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டிருக்கிறார். அப்போது நெகிழ்ந்து போன அழகிரி,’’ நானே சென்னைக்கு இப்போதே கிளம்பி வருகிறேன் என ப்ளைட்டை பிடித்து உடனே கிளம்பி வந்து ரஜினியை சந்தித்து மனம் விட்டு பேசி இருக்கிறார். 

2018 TopTamilNews. All rights reserved.