அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

 

அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

‘பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை’ என்பார்களே…அந்த மாதிரி ஆகியிருக்கிறது திமுகவின் புதிய நியமனங்கள் விவகாரம்.

அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர். பாலு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் ஏற்கனவே 3 பேர் இருக்கும் நிலையில் புதிதாக பொன்முடியும், அ.ராசாவும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏதோ புத்திசாலித்தனமாக செய்துவிட்டதாக அவரை சுற்றியிருப்பவர்கள் புகழ்ந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த நியமனங்களை ரசிக்கவில்லை.

அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

‘’ தலைவர் 70ஐ நெருங்கும் நிலையில் அதற்கடுத்த பொறுப்புகளில் 80ஐ தாண்டியவர்களையா நியமிப்பது? துடிப்பான இளைஞர்களே கட்சியில் இல்லையா!’’ என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள் இவர்கள்.

அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

அத்துடன் ஆண்டி கிளைமாக்சாக ’’எங்களுக்கு கோட்டா இல்லையா!’’ என முக்கிய பிரமுகர்கள், சமூகங்கள் திமுக தலைமையை உலுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
’திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒரு முஸ்லீம் கூட இல்லையே!’ என அந்த சமூகம் கொந்தளித்துக் கிடக்க இப்போது இதே மாதிரியான கோபம், நாடார் இன மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மிகக் கணிசமாக இருக்கும் அந்த சமூக இளைஞர்கள் இது தொடர்பான தங்களது கோபத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

’’எம்பி தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் தென் மாவட்டங்களில் 100% வெற்றியைத் தந்ததற்கு திமுக தலைமை காட்டும் நன்றிக்கடன் இதுதானா! அடுத்தத் தேர்தல் வரட்டும்’’ என அனல் கக்குக்கிறார்கள் நாடார் சமூக இளைஞர்கள்.

அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான கிள்ளை ரவிச்சந்திரன் என்பவர் ஒருபடி மேலே போய், கனிமொழியை தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருக்கிறார். கருணாநிதி இருந்தபோது இந்த பதவியில் இருந்துதான் அதிரடி காட்டினார் மு.க அழகிரி. ஒருசில நாடார் அமைப்புகளும் கனிமொழிக்கு கட்சியில் நிர்வாக ரீதியிலான பதவி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அழகிரி பதவி கனிமொழிக்கு! திமுகவில் வெடித்த கலகம்!

உச்சகட்டமாக கட்சிக்குள் அமைப்பு ரீதியிலான பொறுப்பு தமக்கு தரப்பட வேண்டும் என்பதில் கனிமொழியும் ஆர்வம் காட்டுகிறாராம். மகளிரணி அமைப்பாளர் என்கிற ’டம்மி பதவி’யில் இனியும் தொடர்வதற்கு அவருக்கு விருப்பமில்லையாம். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் மூலம் ஸ்டாலினுக்கு அவர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த இடியாப்பச் சிக்கலை எப்படி தீர்ப்பது என தவியாய்த் தவித்து வருகிறார் ஸ்டாலின்.