நீட் தற்கொலை: ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ ஸ்லோகனின் படுகொலை!

 

நீட் தற்கொலை: ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ ஸ்லோகனின் படுகொலை!

“பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற முழக்கத்துடன் தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கிப் பெண்குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குக் கல்விதரவும் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், பெண்குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதும் பாதுகாப்பிலும் வேறுபாடின்றி கல்வி கற்பிப்பதும் இந்த நாட்டில் சம உரிமையுடன் நாட்டின் ஆண்களைப் போல அதிகாரம் பெறுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழக மாணவி தற்கொலை என்பது ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண்
குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ ஸ்லோகனின் படுகொலை. மாணவியின் தற்கொலை சம்பவத்திற்கு காரணம் யார் என்று, இதயமற்ற பாஜக அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் கொள்கையை நீட் தேர்வு சிதைத்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.