லாக்டவுன் இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, பொருளாதாரம் மோசம் அடைந்தது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லாக்டவுன் இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, பொருளாதாரம் மோசம் அடைந்தது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கொரோனா வைரஸ் விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உத்தர பிரதேச அரசிடம் 70 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. ஆனால் கோவிட்-19 லாக்டவுன் மத்தியில் தொழிலாளர்கள் வீட்டுக்கு நடந்தே சென்றார்கள். இதன் விளைவாக பல இறப்புகள் நிகழ்ந்தன. லாக்டவுன் அமலில் இருந்தபோதிலும், தொற்றுநோய் பரவல் குறையவில்லை.

லாக்டவுன் இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, பொருளாதாரம் மோசம் அடைந்தது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தொற்றுநோய் அதிகரித்தது மற்றும் பொருளாதாரம் சிதைந்து விட்டது. நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமான அமைப்பில் இருந்தது. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய் பரவலால் பொருளாதாரம் மோசம் அடைந்தது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு எங்கே வேலை கிடைக்கும்? மாநில மற்றும் நாட்டின் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களை உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளில் சிக்க வைக்க பா.ஜ.க. செயல்படுகிறது.

லாக்டவுன் இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, பொருளாதாரம் மோசம் அடைந்தது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கனவு நொறுங்கியது. பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்த நல்ல நாட்கள் கனவு நிறைவேற்றப்பட்டதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார். லாக்டவுன் அமலில் இருந்த போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சனிக்கிழமை நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சத்தை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.