இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டும் அகிலேஷ்

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டும் அகிலேஷ்

நாட்டின் எல்லை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்பட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில பா.ஜ.க. அரசை உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ் வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டும் அகிலேஷ்

நமது வர்த்தகம் மற்றும் வேலைகளும் இல்லை, பொருளாதாரமும், வங்கிகளும் கீழ்நோக்கி செல்கின்றன. டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைந்து வருகிறது. தங்களது பி.எப்.-லிருந்து பணத்தை எடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து விட்டனர். பா.ஜ.க. அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக நெட்டிசன்கள் நம்பிக்கையற்றவர்களாக மாறி வருகின்றனர் என பதிவு செய்து இருந்தார்.

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டும் அகிலேஷ்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய நடைமுறைப்படுத்திய பல மாத நீண்ட லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெரிய நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற தொடங்கினர் மற்றும் வேலைகளையும் இழந்தனர். இந்த சூழ்நிலையில்தான் தற்போது மத்திய மற்றும் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தை அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். நெருக்கடிக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நிவாரண தொகுப்புகளை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.