பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வை காங்கிரஸ் காப்பியடிக்கிறது, சமாஜ்வாடி கட்சியை மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்ப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வை காங்கிரஸ் காப்பி அடிக்கிறது. சமாஜ்வாடி கட்சி வழி வேறு. உத்தர பிரதேச மக்களை பா.ஜ.க. மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. சமாஜ்வாடி கட்சியை மக்கள் எதிர்பார்புகளுடன் பார்க்கிறார்கள். காலம் மாறி விட்டது. பெரிய கட்சிகளிடமிருந்து அனுபவங்கள் கிடைத்தன.

பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்
காங்கிரஸ்

2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும். நாங்கள் சிறிய கட்சிகளுக்கு இடமளிப்போம். மேலும், வளர்ச்சி, செழிப்பு, நீதி மற்றும் மரியாதை ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். சமாஜ்வாடி கட்சி நேர்மையுடன் செயல்பட்டது என்பது மக்களுக்கு தெரியும். அடிப்படை பிரச்சினைகள் குறித்த விவாதங்களை தவிர்ப்பது பா.ஜ.க.வின் பழக்கமாகும்.

பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்
பா.ஜ.க.

பா.ஜ.க. ஆட்சியின்கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு சிதைந்துள்ளது. போலி என்கவுண்டர்கள் மற்றும் காவலில் இருப்பது கொல்லப்படும் எண்ணிக்கை மாநிலத்துக்கு கெட்ட பெயரை கொண்டு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயை கையாள்வது திருப்திகரமாக இல்லை. பா.ஜ.க. அரசு 1.5 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறுகிறது. ஆனால் அது தொடர்பான தரவுகளை வழங்கவில்லை. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு வங்க மக்களை தவறாக வழிநடத்துகிறார். அவரது (யோகி) ஆட்சிக்காலத்தில் அரசின் கொள்கைகள் பாழாக்கி விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.