பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர் என் கட்சிக்கு உதவுங்க.. அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்

 

பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர் என் கட்சிக்கு உதவுங்க.. அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர் என் (சமாஜ்வாடி) கட்சிக்கு உதவுங்க என்று அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெரிய கட்சிகளுடான (காங்கிரஸ், பகுஜன் சமாஜ்) எனது அனுபவம் நன்றாக இல்லை. அவர்களுடன் நான் எந்த கூட்டணியும் வைக்கமாட்டேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர், சமாஜ்வாடி கட்சிக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர் என் கட்சிக்கு உதவுங்க.. அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்
காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு (காங்கிரஸ்) 100 இடங்களுக்கு மேல் கொடுத்தோம். ஆனால் அவர்களால் வெல்ல முடியவில்லை. உத்தர பிரதேச மக்கள் காங்கிரஸை நிராகரித்தனர். 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மொத்தமுள்ள 403 இடங்களில் 350 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. வரவிருக்கும் உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடையப் போகிறது. மக்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்டனர்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்புவோர் என் கட்சிக்கு உதவுங்க.. அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்
பா.ஜ.க.

ஆரம்பத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்து விட்டேன் ஏனென்றால் அப்போது தடுப்பூசி அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்யவில்லை. தீபாவளிக்குள் ஏழைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால், நான் தடுப்பூசி எடுத்துக்கொள்வேன் என்று மாநில அரசிடம் தெரிவித்துள்ளேன். ஏப்ரல் மாதத்தில் எனக்கு கொரோனா இருந்தது, விஞ்ஞான ரீதியாக குறைந்தபட்சம் 3 மாதங்களாவது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனது தந்தை முலாயம் சிங் யாதவ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.