சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்… ஆனால் காங்கிரசுடன் வாய்ப்பு இல்லை ராசா… அகிலேஷ் யாதவ்

சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்… ஆனால் காங்கிரசுடன் வாய்ப்பு இல்லை ராசா… அகிலேஷ் யாதவ்

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் ஆனால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2022ம் ஆண்டில் நடக்க இருக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு சமாஜ்வாடியின் மூலோபாயம் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்… ஆனால் காங்கிரசுடன் வாய்ப்பு இல்லை ராசா… அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

2022ம் ஆண்டில் நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். ஆனால் மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். (காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதைதான் அகிலேஷ் யாதவ் எந்தவொரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று மறைமுகமாக கூறியதாக கூறப்படுகிறது)

சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்… ஆனால் காங்கிரசுடன் வாய்ப்பு இல்லை ராசா… அகிலேஷ் யாதவ்
பா.ஜ.க.

பீகாரில் மெகா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்தனர். அவர்களிடம் (மெகா கூட்டணி) மக்கள் ஆதரவு இருந்தது. கிட்டத்தட்ட வெற்றிக்கு தேவையான இடங்களை அவர்கள் வென்றனர். இவ்வளவு பெரிய மோசடி ஜனநாயகத்தில் எங்கும் நடந்திருக்காது. அங்குள்ள மக்களுக்கு பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.