தேர்தலில் ஜெயிக்க எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்று தெரியவில்லை.. அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு.. அகிலேஷ் யாதவ்

தேர்தலில் ஜெயிக்க எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்று தெரியவில்லை.. அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு.. அகிலேஷ் யாதவ்

தேர்தலில் ஜெயிக்க எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்று தெரியவில்லை ஆனால் அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6ல் பா.ஜ.க.வும், ஒன்றில் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: எங்களுடன் (உத்தர பிரதேசத்தில்) செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து பேச விரும்பினோம்.

தேர்தலில் ஜெயிக்க எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்று தெரியவில்லை.. அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு.. அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஆனால் அதனை காட்டிலும் தீவிரமான ஒன்று பீகாரில் நடந்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தனது அரசாங்கத்தை உருவாக்க தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அதனை செய்யமுடியவில்லை. ஜனநாயக மதிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட அனைவருமே இன்று அதிருப்பதி அடைந்துள்ளனர். தேர்தலில் எப்படித்தான் போட்டியிடுவது என்று கேட்கிறார்கள். பீகாரில் 14,000 வாக்குகள் மட்டுமே கூடுதலாக இருந்திருந்தால் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.

தேர்தலில் ஜெயிக்க எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்று தெரியவில்லை.. அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு.. அகிலேஷ் யாதவ்
தேஜஸ்வி யாதவ்

பீகார் தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தலை காட்டிலும் மிகவும் பரபரப்பாக இருந்தது. பா.ஜ.க. எந்த தந்திரத்தை பயன்படுத்தியது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு. இன்று தேர்தல்கள் கணிதமாக மாறிவிட்டன. தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. எல்லாவற்றையும் பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.