விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாறுவார்கள்.. அகிலேஷ் யாதவ்

 

விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாறுவார்கள்.. அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் புதிய விவசாய மசோதாக்களால் எதிர்காலத்தில் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாறுவார்கள் என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், பா.ஜ.க. அரசாங்கம் ஒரு சுரண்டல் மசோதாவை கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகள் தங்கள் பண்ணைகளை பணக்காரர்களுக்கு அடமானம் வைக்கும். இது பண்ணைகளின் எல்லைகளை உடைப்பதற்கும், குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிக்கும் சந்தைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு சதி. எதிர்காலத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உண்மையான விலை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அவர்கள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என பதிவு செய்து இருந்தார்.

விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாறுவார்கள்.. அகிலேஷ் யாதவ்
அகிலோஷ் யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரானது என நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். இந்த மக்கள் இந்த மசோதாக்களை கட்டாயப்படுத்த விரும்புகிறார்கள் இந்த மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது என தெரிவித்தார்.

விவசாய மசோதாக்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் தொழிலாளர்களாக மாறுவார்கள்.. அகிலேஷ் யாதவ்
தேஜஸ்வி யாதவ்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மக்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்த) மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.