கும்பமேளா நடக்கும் ஹரித்வார் சென்று வந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா.. யோகியை தொடர்ந்து உ.பி. அமைச்சருக்கும் கொரோனா

கும்பமேளா நடக்கும் ஹரித்வார் சென்று வந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா.. யோகியை தொடர்ந்து உ.பி. அமைச்சருக்கும் கொரோனா

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச அமைச்சர் அசுதோஷ் டாண்டன் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதியானது. அவர் கடந்த சில தினங்களாக மேற்கு வங்கத்தில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் அசுதோஷ் டாண்டன் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கும்பமேளா நடக்கும் ஹரித்வார் சென்று வந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா.. யோகியை தொடர்ந்து உ.பி. அமைச்சருக்கும் கொரோனா
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

அகிலேஷ் யாதவ் அண்மையில் கும்பமேளா நடக்கும் ஹரித்வார் சென்று அகாரா பரிஷத் தலைவர் மகாந்த் நரேந்திர கிரி உள்பட பல்வேறு மத தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பினார். மகாந்த் நரேந்திர கிரிக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ் லக்னோ திரும்பியவுடன் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். மேலும், கடந்த சில நாட்களில் தன்னிடம் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அகிலேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

கும்பமேளா நடக்கும் ஹரித்வார் சென்று வந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா.. யோகியை தொடர்ந்து உ.பி. அமைச்சருக்கும் கொரோனா
அசுதோஷ் டாண்டன்

உத்தர பிரதேச நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் அசுதோஷ் டாண்டனுக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இது தொடர்பாக அவர் டிவிட்டரில், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்தபின், நான் என்னை பரிசோதனை செய்தேன், கொரோனா பாசிடிவ் என அறிக்கை வந்தது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.