AK60: தல அஜித்தின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர் 

 

AK60: தல அஜித்தின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர் 

தல அஜித்தின் 60வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: தல அஜித்தின் 60வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. 
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படம்  ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  இதில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலா 60’ திரைப்படத்தின் அறிவிப்பைத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘நேர்கொண்ட பார்வை படத்தை ஆக.8ம் தேதி ரிலீஸ் செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. தற்போது AK60 திரைப்படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.