சென்னையில் காணாமல்போன கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை- சென்னை கமிஷ்னர்

 

சென்னையில் காணாமல்போன கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை- சென்னை கமிஷ்னர்

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 கொரோனா மாயமானதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டதாகவும் இவர்கள் தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு மாயமான அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.

சென்னையில் காணாமல்போன கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை- சென்னை கமிஷ்னர்

இந்நிலையில் சென்னையில் கடந்த 19 நாட்களில் காணாமல்போன 270 கொரோனா நோயாளிகளை தனிப்படை கொண்டு தேடிவருவதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்பு சில தனியார் பரிசோதனை மையங்களில் சரியான முறையில் விவரங்களை முறையாக சேகரிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது தனியார் பரிசோதனை மையங்களில் ஆதார் கார்டு அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றாளர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும், அவர்கள் குறித்து எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி அளித்துள்ள மண்டலம் வாரியான பட்டியலில் சோதனை மேற்கொண்டவர்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.