முழு ஊரடங்கால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன – சென்னை காவல் ஆணையர்

 

முழு ஊரடங்கால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன – சென்னை காவல் ஆணையர்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “முழு பொதுமுடக்கத்திற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை தருகிறார்கள். இந்த முழு முடக்கத்தில் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. சென்னையில் இன்று மட்டும் 7873 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் அணியாமல் சென்றதற்காக 3858 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மருத்துவத் துறையை பொருத்தவரைக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு சென்று வரலாம்.

முழு ஊரடங்கால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன – சென்னை காவல் ஆணையர்

கடுமையான ஊரடங்கு இருக்கும்போது ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். யாருக்கும் எதிராக காவல்துறை செயல்படவில்லை. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் 6 மணியிலிருந்து 2 மணி வரை சற்று அதிகமாக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை மொத்தம் 23,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.