ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

 

ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று நாட்களாக காவல்துறை சோதனையில் 10665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் காவல்துறையினர் சோதனை செய்யும் இடங்களை மாநகர ஆணையர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சென்னை கோயம்பேடு அருகில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஊரடங்கை மீறியதாக சென்னையில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 10665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் மீது இன்று 1,395 வழக்குகளும், 3 நாட்களில் 3517 வழக்குகளும் போடப்பட்டுள்ளது, நாளை சில தளர்வுகள் இருந்தாலும் கட்டுபாடுகள் தொடரும்.

ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இதுவரை காவலர்கள் 870 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதில் 333 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் 29 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பறிமுதல் செய்த வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னரே வழங்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு மீதமுள்ள ஊரடங்கு காலத்திலும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.