கொரோனாவே பயந்து ஓடும் அளவிற்கு கட்டுப்பாடுகள்! சென்னை லாக்டவுன் நிபந்தனைகள் 

 

கொரோனாவே பயந்து ஓடும் அளவிற்கு கட்டுப்பாடுகள்! சென்னை லாக்டவுன் நிபந்தனைகள் 

ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்கள் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க  வேண்டும். நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்

காய்கறி, மளிகை பொருட்களை வாங்க பைக், கார்களில் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது… அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும். உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது. திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

கொரோனாவே பயந்து ஓடும் அளவிற்கு கட்டுப்பாடுகள்! சென்னை லாக்டவுன் நிபந்தனைகள் 

முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும். அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை… அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது. சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் தினசரி சென்னை வந்து செல்ல முடியாது. அரசின் சிறப்பு அனுமதி பெற்று வேண்டுமானால் சென்னைக்குள் வந்து செல்லலாம்

அண்ணா சாலை உட்பட சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும். உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும். வழக்கமான போக்குவரத்திற்கு சென்னை சாலைகளில் அனுமதியில்லை. பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை. போலி இ பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது. திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க வேண்டும். நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.