165 பக்க அறிக்கை; நீட் ஆய்வறிக்கையின் முடிவு என்ன? – ஏ.கே.ராஜன் விளக்கம்!

 

165 பக்க அறிக்கை; நீட் ஆய்வறிக்கையின் முடிவு என்ன? – ஏ.கே.ராஜன் விளக்கம்!

நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, அதன் தாக்கத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை கடந்த ஜூன் 10ஆம் தேதி நியமித்து உத்தரவிட்டது. நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அக்குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக்களை கேட்ட ஏ.கே ராஜன் குழு, நீட் தேர்வின் ஆய்வறிக்கையை தயார் செய்தது.

165 பக்க அறிக்கை; நீட் ஆய்வறிக்கையின் முடிவு என்ன? – ஏ.கே.ராஜன் விளக்கம்!

இதனிடையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக அரசு ஏ.கே.ராஜன் குழுவை நியமித்துள்ளதாக பாஜகவின் கரு. நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சரியாக ஒரு மாதத்தில் அதாவது கடந்த 10ஆம் தேதி ஏ.கே.ராஜன் குழுவால் அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. பாஜக தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். இந்த நிலையில், இன்று காலை ஏ.கே ராஜன் தலைமையிலான குழு முதல்வர் மு.க ஸ்டாலின் இடம் நீட் தேர்வு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து. 165 பக்க ஆய்வறிக்கையை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். அனைத்து துறை சார்ந்தவர்களிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வு நடத்தியது திருப்தியாக இருந்தது என்று கூறினார். மேலும், தங்களது சொந்த கருத்துக்களை அறிக்கையில் முன்வைக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.