“போனி கபூர் காணவில்லை” தல ரசிகர்கள் அட்டகாசம்

 

“போனி கபூர் காணவில்லை” தல ரசிகர்கள் அட்டகாசம்

ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் வலிமை. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை நல்ல வரவேற்பபைப் பெற்றது. வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை ஹியூமா குரைஷி வலிமை படத்தில் நடித்து வருகிறார்.  இவர் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். அஜித்தின் 60 ஆவது படமான வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகமுடியவில்லை

Image

இந்நிலையில் விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் வலிமை படம் குறித்து கடந்த சில நாட்களாகவே எந்த அறிவிப்பும் வரவில்லை, எனவே வலிமை அப்டேட் வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்த அஜித் ரசிகர்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று, தற்போது போஸ்டர் அடித்து ஒட்ட தொடங்கியுள்ளனர். படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் ரசிகர்களுக்கு டஃப் கொடுக்க படம் குறித்த அப்டேட்டாவது கொடுங்கள் என அஜித் ரசிகர்கள் இணையத்தில் போஸ்ட் செய்து வருகின்றனர்.